August 12, 2017
தண்டோரா குழு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் வீடுகளுக்குள் புகுந்த ஒரு கொள்ளை கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி வீட்டில் இருந்தவற்றை திருட முயன்றுள்ளனர். இதில் வீட்டில் இருந்த ஒருவர் கொள்ளை கும்பலுடன் போராடி கூச்சலிட்டுள்ளார்.
இதனிடையே அவருடைய சத்தம் கேட்டு திரண்ட ஊர்பொதுமக்கள் கொள்ளையர்கள் 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். கொள்ளையர்களை கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்தனர். அதன் பின் காவல்துறையினரிடம் அவர்களை மக்கள் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பொதுமக்களை பார்த்தவுடன் கொள்ளை கும்பலை சார்ந்த மீதம் உள்ள நான்கு பேர் ஆம்னி வேனில் தப்பிச் சென்றுவிட்டனர். காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.