• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கொரோனா: தேசிய பேரிடராக அறிவிப்பு

March 14, 2020 தண்டோரா குழு

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி உயிர்பலி வாங்கி வருகிறது.கொரோனா தொற்றுநோயால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,436ஐ தாண்டியுள்ளது. உலகெங்கிலும் 145 நாடுகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 810 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் 66 இந்தியர்கள், 17 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 10 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் ஒருவருக்கும், அகமது நகரில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்து உள்ளது.

தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. கொரோனா வைரசை பெரும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ள நிலையில், அதனை தேசிய பேரிடராக உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே நிர்ணயிக்கும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை தேசிய மருத்துவ அமைப்பு வழங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று கொரோனாவை பேரிடராக கவனத்தில் கொண்டு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரசுக்கு பலியான குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க