• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேஸ் சிலிண்டருக்கு கண்டித்து மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

February 25, 2020 தண்டோரா குழு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஜனநாயக மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு சமீபத்தில் கேஸ் சிலிண்டருக்கான விலையை உயர்த்தியது. இதனை கண்டித்து காட்டூர் பகுதியில் உள்ள ஜனநாயக மாதர் சங்க அலுவலகம் அருகே சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் பட்டை நாமம் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய மாதர் சங்கத்தின் துணை தலைவர் வாசுகி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாசுகி,

அனைத்து மக்களும் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர் விலை மாதா மாதம் உயர்த்தபடுவதாகவும் கடந்த வருடம் 736 இருந்த விலை தற்போது 950 ரூபாய் வரை விலை ஏறி உள்ளது. இதற்கு மத்திய அரசு கடைபிடிக்கும் கொள்கை தான் காரணம். கேஸ் அல்லது பெட்ரோலிய பொருட்களுக்கு கொடுக்க கூடிய மானியத்தை குறைப்பதன் காரணமாக விலை உயர்த்தபட்டு உள்ளது. பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டம் மூலம் ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பை வழங்கிய பின்னர் ஆயிரம் ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க கூடிய நிலையில் எத்தனை குடும்பங்கள் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

கார்பரேட் முதலாளிகளுக்கு வரி சலுகை வாரி வழங்கும் மத்திய அரசு வங்கிகளில் கடன் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடி விடுவதை பற்றி கவலை படாத மத்திய அரசு சிக்கனம் என்ற பெயரில் மானியத்தை குறைப்பது ஏற்க முடியாது என்றார்.இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்த அவர் மத்திய அரசு பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கு நிதி குறைத்து உள்ளது எனவும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடந்த முறையை விட 13 சதவீதம் குறைவு எனவும் கடந்த ஆண்டு இந்த வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கி வைத்து உள்ளது என்றவர் கல்வி,மருத்துவம் சமூக நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு உள்ளது என்றார்.ஜி.எஸ்.டி,பண மதிப்பிழப்பு காரணமாக தொழில்கள் நசிந்து உள்ளது எனவும் மத்திய மாநில பட்ஜெட்களால் எந்த வித பயனும் இல்லை என்றார்.

விவசாயிகள் தற்கொலையை விட வேலை இல்லாதவர் தற்கொலை அதிகமாக நடப்பதாக புள்ளி விவரங்கள் செல்வதாகவும் வேலையின்மை தடுக்க எந்த அறிவிப்பும் இல்லை என்றார்.ரயில்வேவை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது இதனால் பொதுமக்கள் பாதிக்கபடுவார்கள் எனவும் மாநில அரசு உரிமைக்காக எதிர்த்து போராடமல் மத்திய அரசு கொண்டு வருவதை பின்பற்றி கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க