• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேராளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக கேரள எல்லை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள்

March 9, 2020

கேராளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியை தொடர்ந்து கோவையில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் தமிழகத்தில பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் கால்நடை நோய்தடுப்பு மற்றும் சுகாதார துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைகளாக உள்ள 12 இடங்களில் அதிகாரிகள் சோதனை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 5 இடங்களிலும், பொள்ளாச்சியில் 7 இடங்களிலும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்து அடிக்கப்படு வருகிறது. 12 இடங்களிலும் 24 மணி நேரம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோழி, முட்டை, தீவனம், கோழிக்கழிவுகள் கொண்டுவருவது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க