• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளா மாணவனின் இணையத்தளத்தை வாங்கியது பேஸ்புக்.

April 16, 2016 தண்டோரா குழு

உலகில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளத்தில் முக்கிய இடத்தில் இருக்கிறது பேஸ்புக்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஜுகும்பர். உலகின் முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். இவருக்கு மேக்ஸ்சான் என்ற மகள் உள்ளார். சமூகவலைத்தளத்தில் கொடிகட்டிப் பறந்து வருகிறார் இவர்.

ஆனால் அவருடைய வழியிலேயே அவருடன் ஒரு வியாபாரத்தைச் செய்து முடித்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த என்ஜினியர் மாணவர்.

கேரள மாநிலம் கொச்சினில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னணு துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார் அகஸ்டின். இவர் கடந்த டிசம்பர் மாதம் பேஸ்புக் நிறுவனரின் மகள் ஜுகும்பெரின் மகள் மேக்ஸ் சான் என்பவரின் பெயரில் ஒரு இணையத்தளத்தை வாங்கியுள்ளார்.

இது குறித்து அகஸ்டின் கூறுகையில், சாதாரண ஒரு இமெயில் எனக்கு வந்தது அதில் நீங்கள் வாங்கியுள்ள இணையத்தளத்தை எங்களுக்கு விற்பனை செய்கிறீர்களா? எனக் கேட்டனர். நானும் ஒரு விலை பேசி இறுதியாக 7௦௦ டாலருக்கு அதனை நான் விற்றேன். பிறகு தான் அந்த மெயிலை அனுப்பியது சாரா சாப்பல் என்ற ஒரு பெண் என்பதும் அவர் பேஸ்புக் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் ஐகனிக் நிறுனத்தின் மேலாளர் என்பது தெரியவந்தது.

அவர் அனுப்பிய ஒரு கடிதத்தை வைத்துத் தான் எனக்குத் தெரிந்து எனது இணையத்தளம் வாங்கியது பேஸ்புக் நிறுவனம் என்று. இதையடுத்து நான் அவர்களிடம் பெரிதாக பேரம் ஏதும் பேசாமல் வியாபாரத்தை முடித்தேன் என்றார்.

மேலும், பேஸ்புக் நிறுவனத்திடம் வியாபாரத்தை நடத்துவது தெரிந்திருந்தால், அதிக விலையை அவர்களிடம் கேட்டிருக்கலாம் என்று எனது நண்பர்கள் தெரிவித்தனர் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க