• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேம்ஃபோர்டு சர்வதேசப்பள்ளியின் 13 வது வருடாந்திர விளையாட்டு விழா

December 24, 2022 தண்டோரா குழு

கேம்ஃபோர்டு சர்வதேசப்பள்ளியின் 13 வது வருடாந்திர விளையாட்டு விழா கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக
இராணுவத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் பரத் சிங் கலந்து கொண்டார்.இவர் தற்போது தேசிய மாணவர் படையில் 4TN Battalion NCC Commanding Officer ஆக பணியாற்றுகிறார் . பள்ளி மாணவ மாணவியரின் இறைவணக்கத்துடன் இவ்விழாவானது ஆரம்பமானது.

5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியரின் அணிவகுப்பும் NCC குழுவின் அணிவகுப்பும் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருந்தது. சபை உறுப்பினர்களின் உறுதிமொழிக்குப் பின்னர் சிறப்பு விருந்தினர் இவ்விழாவினைத் துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் தேசிய ,மாநில மற்றும் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் சாதனைப் படைத்த மாணவ மாணவியர் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி மைதானத்தை வலம் வந்தனர்.

1 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களின் மலர் நடனம் ,ஜும்பா – சியர் நடனம் , குடை நடனம் , கராத்தே , அக்ரோபாடிக்ஸ் மற்றும் பிரமிட் , பேண்டு அணிவகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.இதைத் தொடர்ந்து பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசளிப்பு விழாவில் அதிக புள்ளிகள் பெற்று வெற்றிக்கோப்பையை தட்டிச் சென்றது ADMIRALS அணி . சிறப்பாக MARCH PAST செய்த GENERALS அணிக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர் விருந்தினர் பேசுகையில்,

பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார் . மேலும் மாணவர்கள் தங்களது உடல்நலத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும் அதுவே நமக்கு பலமும் வளமும் தருவதாகும் எனவும் எடுத்துரைத்தார்.பள்ளி பேண்டு குழுவினரால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு இவ்விழா இனிதே நிறைவுற்றது.

இவ்விழாவில் பள்ளியின் நிறுவனர் அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் பள்ளி முதல்வர் பூனம் சியால் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க