• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குற்றவாளிகளை பிடிக்கச்செல்லும் போது காவலர்கள் கையுறைகள் அணிய வேண்டும் – கோவை கமிஷ்னர்

June 18, 2020 தண்டோரா குழு

கோவை தெற்கு காவல் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநகர கமிஷனர் சுமித் சரண் வழங்கினார்.

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில், கோவை தெற்கு மற்றும் மேற்கு காவல் மண்டலத்தில் 8 காவல் நிலையங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாருக்கு கையுறை, முகக்கவசம், கிருமி நாசினிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை மாநகர கமிஷனர் சுமித் சரண் வழங்கினார். நிகழ்வில் மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா மற்றும் உதவி கமிஷனர் செட்ரிக் மனுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.

அப்போது காவலர்களிடையே பேசிய கமிஷனர் சுமித் சரண்,

வாகன சோதனைகளில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும்,குற்றவாளிகளை பிடிக்கச்செல்லும் போது கையுறைகள் அணிய வேண்டும், அனைத்து காவலர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.மேலும் காவலர்கள் ஊட்டச்சாத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும், உடல் பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அப்போது தான் கொரோனா போன்ற தொற்றில் இருந்து தற்காத்துக் கொண்டு பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க