• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த கேப்டன் வருண் சிங் மரணம்

December 15, 2021 தண்டோரா குழு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயத்துடன் உயிர்பிழைத்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் வருண்சிங் மட்டும் உயிர் தப்பினார். அவருக்கு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், உயர் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் இன்று காலமானார். இதன் மூலம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க