• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குணியமுத்தூர் பகுதியில் துவங்கப்பட்ட தி மாடர்ன் டிராவல்ஸ் இரண்டாவது கிளை

October 20, 2022 தண்டோரா குழு

கோவை குணியமுத்தூர் பகுதியில் துவங்கப்பட்ட தி மாடர்ன் டிராவல்ஸ் இரண்டாவது கிளையை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் திறந்து வைத்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தி மாடர்ன் டிராவல்ஸ் இசுலாமியர்களுக்கான ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணம் சேவைகளையும் மற்றும் சிங்கப்பூர்,மலேசியா,தாய்லாந்து போன்ற வெளிநாட்டு சுற்றுலா பயணங்களுக்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்து தருகின்றனர்.

இந்நிலையில் தி மாடர்ன் டிராவல்ஸ் நிறுவனம் தங்களது இரண்டாவது கிளையாக குணியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்க் அருகே உள்ள அகில் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் துவக்கியுள்ளனர்.நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜமீல் அகமது மற்றும் ஏஜாஸ் அகமது ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக்,தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் டெக்ஸிட்டி கலீல், கார்த்திகேயன்,சாபுதீன்,கர்நாடகா டிரான்ஸ்போர்ட் மேலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க