• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்காவுடன் சட்டபேரவைக்கு வந்த ஸ்டாலின் !

July 19, 2017 தண்டோரா குழு

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னையில் சட்ட விரோதமாக குட்கா, பான் மசாலா விற்பனை நடைபெறுவதாக கூறி தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து சட்டபேரவையில் காண்பித்தார்.

தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சட்ட விரோதமாக குட்கா, பான் மசாலா விற்பனை நடைபெறுவதாக கூறி தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து சட்டபேரவையில் காண்பித்தார்.

அப்போது முதல்வர் பழனிசாமி, தடை செய்யப்பட்ட குட்காவை சட்டசபைக்கு எப்படி கொண்டு வரலாம்? அதனை போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்திருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு வந்தது சட்ட விரோதம் எனக் கூறினார்.

பின்னர் சபாநாயகர் தனபால்,தடைசெய்யபட்ட பொருளை பேரவைக்கு கொண்டுவந்ததாக மு.க.ஸ்டாலின் மீது உரிமை மீறல் புகார் தெரிவித்தார்.இதனையடுத்து சட்டசபையிலிருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின்,

அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் ஆதரவுடன் குட்கா விற்பனை நடப்பதை வெளிக்காட்டவே குட்காவை கொண்டு வந்தேன்.லஞ்சம் பெற்று கொண்டு குட்கா விற்க அனுமதி அளித்த சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

சென்னையில் எந்தெந்த கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து திமுக ஆய்வு செய்தது. குட்கா பல கடைகளில் தாரளாமாக கிடைக்கிறது. ஆனால் இது குறித்து பேச பேரவையில் அனுமதி கிடைக்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம் என்றார்.

மேலும் படிக்க