• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும் எந்த சின்னம் கிடைத்தாலும் வெற்றி பெறுவோம் – கோவை அமமுக வேட்பாளர்

March 26, 2019 தண்டோரா குழு

கோவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அப்பாதுரை, மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை மக்களவை தொகுதியில் அப்பாதுரை போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அப்பாதுரையோடு, செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்தனர். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் அப்பாதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேலஞ்சர் துரை, சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாதுரை,

குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும் எந்த சின்னம் கிடைத்தாலும் 40 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறுமென நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டு வருவோம் எனவும், மக்கள் எதிர்க்கும் திட்டங்களை தடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க