• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிருஷ்ணா கல்லூரியில் ஆய்வகத்திலேயே கைசுத்திகரிப்பு திரவம் தயாரித்து வழங்கல்

March 19, 2020

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி “கொரோனா“ வைரஸ் எனப்படும் “கோவிட் 19“ வைரஸின் தாக்கத்திலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வண்ணமும் கல்லூரியின் வளாகத்தை தூய்மையாக பராமரிக்கும் வண்ணமும் தமது கல்லூரியின் ஆய்வகத்திலேயே கைசுத்திகரிப்பு திரவத்தினை தயாரித்து வழங்கியுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே. ஜேனட் இணைந்து முனைவர் வி. ராகவி (முதலாம் ஆண்டு துறைத்தலைவர்) முனைவர் எம். சங்கீதா மற்றும் கே. பானுப்பிரியா ஆகியோர் கொண்ட குழு இந்த கோவிட் 19 சமூக சவாலை எதிர்கொள்ளும் வண்ணம் இக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் 80L ஆல்கஹால் மற்றும் இயற்கையாகப் பெறப்படும் சுத்திகரிப்பு மூலக்கூறுகளிலிருந்து இந்த “கொரோனா“ வைரஸ் எனப்படும் “கோவிட் 19“ வைரஸ் இல்லாத கல்லூரி வளாகமாக மாற்றும் வண்ணம் சுத்திகரிப்பு திரவத்தை உருவாக்கியுள்ளது.

கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே. ஜேனட் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் இந்த கைசுத்திகரிப்பு திரவத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் செயல்விளக்கம் அளித்தனர். அதிக செலவாகும் கைசுத்திகரிப்பான்களை வெளியே இருந்து பெறுவதைக்காட்டிலும் கல்லூரியிலேயே உற்பத்தி செய்யப்படும் இந்த கைசுத்திகரிப்பு திரவம் கல்லூரியின் அனைத்து முக்கிய பிரதான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய ஸ்ரீமதி எஸ்.மலர்விழி இந்த சுத்திகரிப்பு திரவத்தை உருவாக்கிய கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. ஜேனட் அவர்களுக்கும் அவர்தம் தலைமையிலான குழுவினருக்கும் பாராட்டுதலை தெரிவித்துக் கொண்டார். இந்த சுத்திகரிப்புத்திரவம் அனைத்து ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் “கொரோனா“ வைரஸ் எனப்படும் “கோவிட் 19“ வைரஸ் பரவலை தடுத்து நிறுத்தும் வண்ணம் கண்டு பிடித்துள்ள இச்சுத்திகரிப்பு திரவம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வுக்கு ஒரு மிகப்பெரும் சான்றாக அமைந்துள்ளது.

இத்தோடு அல்லாமல் கல்லூரியில் உள்ள அனைத்து கட்டிடங்கள் நூலகங்கள் வகுப்பறைகள் மாணவ மாணவியர் விடுதிகள் நீர் சுத்திகரிப்பு மையங்கள் அனைத்து கல்வி தொடர்பான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தையும் வைரஸ் தொற்று ஏற்படாமல் சுத்திகரிப்பு செய்யப்பட்டன.

மேலும் படிக்க