• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் தாம்பாலம் தட்டுக்களின் கண்காட்சி

February 7, 2020

கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் தாம்பாலம் தட்டுக்களின் இரண்டு நாள் கண்காட்சி வரும் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் தாம்பாலம் தட்டுக்களின் கண்காட்சி கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்டது.

இக்கண்காட்சியை கிராப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் கீதா ராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். விழாவிற்கு குமரகுரு கல்லூரியின் தாளாளர் சங்கர் வாணவராயர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த கண்காட்சி குறித்து கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு தலைவர் ஜெயஸ்ரீ ரவி, செயலாளர் சுஜானி பாலு ஆகியார் கூறுகையில்,
கிராப்ட் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அகில இந்திய அளவிலான தேசிய கூட்டம் இந்தாண்டு கோவையில் நடைபெறுகின்றது. இதை முன்னிட்டு தாம்பால தட்டுக்களின் கண்காட்சி ஒன்றை கோவையில் நடத்ததிட்டமிட்டோம். தாம்பூலம் என்பது, தென்னிந்தியாவின் பாரம்பரியமாக, பன்னெடுங் காலமாக மறக்க முடியாத ஒன்று. வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், பூக்களைக் கொண்ட தட்டில் வைத்து, விழாக்காலங்களில் மட்டுமின்றி, விசேஷ நாட்களிலும் பூஜை செய்கின்றனர்.

தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில், மிக பழமையான தாம்பால தட்டுக்களையும் அது பற்றிய ஆவணங்களையும் காட்சிக்கு வைக்கிறது. சில்வர், பித்தளை, மரம் மற்றும் கற்களால் ஆன தட்டுக்கள் இடம் பெறுகின்றன. பல தனித்துவமிக்க இத்தகைய தாம்பாலம் தட்டுக்களை, பல வீடுகளிலும், குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் பெற்று காட்சிப்படுத்தவுள்ளது. நமது மண்டலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக இது காட்சிப்படுத்தப்படும். இந்த கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள கைவினை பொருட்களும் இடம் பெறும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள கைவினை தட்டுக்களும் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும். தமிழ்நாடு கைவினை மன்றம், நாடு முழுவதும் உள்ள கைவினை கலைஞர்களுடன் இணைந்து வடிவமைப்புகளை அளித்து, பெற்றுள்ளது. இது மீண்டும் கைவினை பொருட்களை புதியதாக உருவாக்கவும், மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், புதிய பல்வேறு வகையான தாம்பாலங்களை வடிவமைக்கவும் உதவி வருகிறது.

கோவையில் நடக்கும் இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட கைவினை பொருள்கள் இடம் பெறுகின்றன. நமது பகுதியில் உள்ள உலோகங்கள், பித்தளை, தாமிரம் போன்றவைகளில் உருவாக்கப்பட்ட தாம்பால தட்டுக்கள் இடம் பெறுகின்றன. 20 வருடங்களுக்கு முன்பு இருந்த தாம்பால தட்டுக்களும், மன்னர் கால தாம்பால தட்டுக்களும் கண்காட்சியில் உள்ளன. அழிந்து வரும் நமது கலையை மாணவர்களும் கற்று இந்த கலையை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்தில் இந்த கண்காட்சி நடத்தப்படுகின்றது. இங்கு உள்ள தாம்பால தட்டுக்களை பொது மக்கள் ஆர்டரின் பேரில் வாங்கிக்கொள்ளலாம். ஆர்டர் செய்பவர்களுக்கு 45 நாட்களுக்குள் செய்து கொடுக்கப்படும்.இங்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிள் உள்ள கைவினைக் கலைஞர்களின் தாம்பாலங்களும் இடம்பெற்றுள்ளன. காஷ்மீரி பாபியர் மச்சே, வால்நட் மர வேலைப்பாடு, பித்ரி, உலோகத்தின் மீதான பதிவுகள், சித்திரங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. பார்வையாளர்கள் இவற்றைபார்வையிட்டு வாங்கி, பாரம்பரியமிக்க இந்த பொருட்களை பயன்படுத்தலாம்.

இந்த கண்காட்சி கோவை புலியகுளத்தில், கார்மல் கார்டன் பள்ளிக்கு எதிரே உள்ள கூடம் அரங்கில் வரும் 2020 பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு பொருளாளர் கோபாலகிருஷ்ணா சரண்யா பாலு, லட்சுமி ராமச்சந்திரன் மற்றும் வெங்கடலட்சுமி ஆகியோர் செய்துவருகின்றனர்.

மேலும் படிக்க