• Download mobile app
23 Nov 2025, SundayEdition - 3574
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரானைடு முறைகேட்டால் தமிழக அரசுக்கு ரூ.1365 கோடி நஷ்டம்

December 21, 2016 தண்டோரா குழு

கிரானைடு முறைகேட்டால் தமிழக அரசுக்கு ரூ. 1365 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலூர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பது தொடர்பாக முறைகேடு நடந்ததுள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துவந்தனர். இது தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொண்ட விசாரணையில் முறைகேடுகள் நடந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகப் பல வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக காவல்துறையினர் , அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரானைட் முறைகேடு தொடர்பாக பல வழக்குகளில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளனர். 2 நிறுவனத்தினரின் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 4 நிறுவனங்கள் மீது காவல்துறையினர் மேலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 3,633 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப் பத்திரிகையில், தமிழக அரசுக்கு ரூ. 1,365 கோடியே 96 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க