• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிணத்துக்கடவில் 10 மாதகுழந்தையை கடத்தி கல்லால் தாக்கி கொலை செய்த நபர் கைது

July 30, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் மனைவி பிரிந்து சென்றதால் 10 மாத குழந்தையை கடத்தி கல்லால் தாக்கி கொலை செய்தவர் கைது செய்யபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு கருப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (30) இவரது மனைவி முத்துமாலை வயது (30).இவர்களுக்கு தர்ஷினி 10 மாத பெண் குழந்தை உள்ளது.நேற்று காலை முத்து மாலை தனது வீட்டில் கைக்குழந்தையுடன் இருந்த போது அங்கு வந்த குமாரின் அப்பா செல்வராஜ்,முத்துமாலை கையில் இருந்த குழந்தை தர்ஷினியை பிடிங்கி முத்துமாலையை கீழே தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் கொண்டுசென்றார்.

இது குறித்து முத்துமாலை தனது கணவர் குமாருக்கு தெரிவித்தார் இதனையடுத்து குமார் தனது அப்பா செல்வராஜையும் குழந்தை தர்ஷினியையும் தேடினார்கள்.ஆனால் இரவு வரை கிடைக்காததால் குமார் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் செல்வராஜ் மீது குழந்தையை கடத்தி சென்றதாக வழக்குபதிவு செய்து தேடினர். அப்போது செல்போன் டவர் மூலம் செல்வராஜ் போனை ஆய்வு செய்தபோது கிணத்துக்கடவு ரெயில்நிலையத்தில் இருப்பதாக தெரியவந்தது. உடனே போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரித்ததில் குழந்தையை ஒத்தக்கால்மண்டபம்-தொப்பம்பாளையம் பிரிவுபகுதியில் கொலைசெய்ததாக கூறினார். இதைகேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வராஜை அழைத்துசென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் செல்வராஜின் 2-ம் மனைவி சக்தி கனி பிரிந்து செல்லகாரணம் தனது மகனும், மருமகளும் தான் காரணம் என நினைத்து அதற்கு பழி வாங்க குழந்தையை கடத்தி சென்றவர், மகன் போலீசில் புகார் செய்ததால் இனி தப்பமுடியாது என நினைத்தவன் 10 மாத குழந்தையை பேத்தி என்றும் பாராமல் கல்லால் தாக்கி கொலைசெய்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க