• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீர் பிரிப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது!

August 5, 2019 தண்டோரா குழு

காஷ்மீரில் 10% இடஒதுக்கீடு, மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது. எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தபின் மசோதாக்கள் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பிரதமர் மோடியும் மாநிலங்களவைக்கு வருகை தந்தார். முதலில் காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மசோதா, ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.அதன்பின் மறுசீரமைப் பதற்காக, காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்ப்பு தெரிவித்து 61 ஓட்டுகளும் விழுந்தன. இதனையடுத்து இம்மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க