• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல் துறையின் நடவடிக்கைக்கு மன உளைச்சலான பெண் தீக்குளிக்க முயற்சி

January 4, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம்.இவருக்கு காமராஜர் சாலை பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது.அங்கு கடையும் வைத்து உள்ளார்.சொந்தமாக ஆட்டோ வைத்து வாடைக்கு ஓட்டி வருகிறார்.இந்து முன்னேற்ற கழக அமைப்பின் மாநில அமைப்பாளர் மணிகண்டன் என்பவர் தன்னை மிரட்டி பணம் பரிப்பதாகவும் தன்னுடைய இடத்தை புறம்போக்கு நிலம் என்று பொய்யான புகார்களை மாநகராட்சி மற்றும் அரசிடம் கூறுவதாகவும் கூறி கடந்த 25 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசல் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார் .

இந்தநிலையில் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் மணிகண்டன் மீதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில் மணிகண்டனின் மனைவி லோக நாயகி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியரை சந்தித்து தனது கணவர் மணிகண்டன் மீது போடப்பட்டு உள்ள வழக்கு பொய் வழக்கு என புகார் அளிக்க வந்தார். அப்போது மறைத்து வைத்து இருந்த டீசலை ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி லோக நாயகியை காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க