• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் – வைரமுத்து வேண்டுகோள்

November 19, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன் என கவிஞர்
வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது கஜா புயல். இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்,

புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குவிரைந்து நிதி வழங்க மத்திய அரசைத்துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.தாமதிக்கப்படும் நீதிமட்டுமன்றுதாமதிக்கப்படும் நிதியும்மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.காற்றால் மூச்சுப்போனகுடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க