• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார் விபத்தில் கோவை மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் உயிரிழப்பு

November 2, 2019 தண்டோரா குழு

கார் விபத்தில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன் என்பது உயிரிழந்தார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன், இவர் பணி நிமித்தமாக சென்னை சென்று விட்டு இன்று காலை கோவை திரும்பினார், அவர் வந்த கார் கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மின்னல் வேகத்தில் மோதியது இதில் காரின் முன்னால் அமர்ந்திருந்த உதவி நகரமைப்பு அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.கார் ஓட்டுனர் இயேசுதாஸ் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து இயேசுதாஸை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு சென்னையில் இருந்து வாடகை கார் மூலம் கோவை வந்து கொண்டிருக்கையில் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க