• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதில் பூ சுத்தி கொண்டு மனு அளிக்க வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர்

March 14, 2022 தண்டோரா குழு

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என காதில் பூ சுத்தி கொண்டு வந்த ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் மனு அளிக்க வந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் காதில் பூ சுத்தி கொண்டும் மனுக்களை கழுத்தில் அணிந்தவாறும் நூதன முறையில் மனு அளிக்க வந்திருந்தனர்.

இது குறித்து கூறிய அவர்கள்,

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு நாளில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் காதில் பூ சுத்திக்கொண்டும், இதுவரைக்கும் அளித்த மனுக்களை மாலையாக அணிந்துக்கொண்டும் வந்ததாக தெரிவித்தனர்.

மேலும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை சீராக அமல்படுத்தி நடத்தி வருகிறது என கூறிய அவர்கள் சில அரசு அலுவலர்கள் அரசுக்கு அவபெயர் ஏற்படுத்தும் வகையில் மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதுமில்லை எனவும் மக்கள் அளிக்கும் மனுகளுக்கு எந்தவிதமான பதிலும் தருவதில்லை என குற்றம் சாட்டினர்.

பொது மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்க