• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த கமல் பட நடிகை !

March 27, 2019 தண்டோரா குழு

நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஊர்மிளா மடோன்த்கர். இவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.இதையடுத்து,அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

காந்தி, நேரு, படேல் போன்றோரை பின்பற்றும் குடும்பத்தில் இருந்து, தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.அரசியலில் தற்போதுதான் முதல் அடியை எடுத்துவைக்கிறேன் என்றாலும் சமூகத்தை பற்றிய நல்ல புரிதல் தனக்கு ஏற்கெனவே இருக்கிறது. நடிகை ஊர்மிளா மடோன்த்கர் கட்சியில் இணைந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க