• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி பதவியேற்பு

December 16, 2017 தண்டோரா குழு

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து 19 ஆண்டாக பதவி வகித்தார். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவரால் அரசியலில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இதையடுத்து, புதிய தலைவருக்கான தேர்தலில் ராகுல் காந்தி மனுதாக்கல் செய்தார். எனினும் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், காங்கிரஸ் தலைவராக ராகுல் கடந்த 11ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தி இன்று முறைப்படி கட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நேரு குடும்பத்திலிருந்து வரும் 6வது காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவியேற்றதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

ராகுல் காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராகுல் தலைவரானதை முன்னிட்டு நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க