• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறப்பு எப்போது? அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்

June 10, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் “அனைவருக்கும் வீடு” கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை முதல்வர் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணி ஆணைகளையும் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை (ஜூன்12)முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,

இத்திட்டத்திற்காக இன்று கோவை மாவட்டத்திற்கென முதல்வர், 18 கோடியே 45 லட்சம் மதிப்பிலான ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளதாகவும் வரக்கூடிய காலத்தில் மிதமுள்ள பயனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தார்.

இந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது என கூறிய அவர் தமிழகத்தில் புதிய கடைகள் இல்லை என்றும் இடமாற்றம் செய்யப்படுகிறது அதனை அப்பகுதி மக்கள் வேண்டாம் என்று கூறினால் அதனை நிறுத்தி விடலாம் என தெரிவித்தார்.

மேலும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினால் கோவை மாவட்ட மக்களின் குறைகளை தீர்க்கும் கோவை 24×7 சேவையில் 8,407 அழைப்புகள் வரப்பட்ட நிலையில் 4,637 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள புகார்களுக்கும் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவை தொடர்ந்து செயல்படும். கவுண்டம்பாளையம் மேம்பாலம் திறப்பு குறித்து கேட்ட கேள்விக்கு “நாளை சந்திப்போம்” என பதிலளித்தார்.

மேலும் சிலர் தாங்களாகவே திறந்து கொள்வோம் என கூறி வருவதற்கு அவ்வாறு திறந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். வாலாங்குளம் படகு சவாரியில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர் சுற்றுலா துறை சார்பில் அந்தக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இது குறித்து கடிதம் அனுப்பப்பட்டு கட்டணம் குறைவிற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.மேலும் சிலர் ரேஷன் கடைகளில் புகைப்படங்களை வைத்துக் கொள்கின்றனர், இது ஒரு தவறான நடவடிக்கை, என கூறினார்.

மேலும் வரக்கூடிய காலங்களில்
கோவை மாவட்டத்திற்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.அதேசமயம் இன்றைய தினம் மேலும் 45 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் அரசு உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் துணை மேயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க