• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்லூரி முதல்வர் எழுத்து பூர்வமாக அறிக்கை அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்

March 20, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்காக சாலை மறியலில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தேர்தல்

முடிந்த பின்பு திரும்ப பெற வலியுறுத்தப்படும் என முதல்வர் எழுத்து பூர்வமாக அறிக்கை அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் இவ்வழக்கை சிபிஐ எடுக்க வேண்டியும் , இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள், அரசியல் பொதுநல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பதினான்காம் தேதி சட்டக்கல்லூரி மாணவர்கள் வடவள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்த்தில் 167 பேர் ஈடுபட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு வடவெள்ளி காவல் நிலையத்தில் பதியப்பட்டது. இதில் கல்லூரி நிர்வாகம் 17 மாணவர்களின் முழு தகவல்களை காவல் துறைக்கு கொடுத்ததாக குற்றம் சாட்டினர். காவல் துறை பரிந்த புகாரை திரும்ப பெற வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து கல்லூரி முதல்வர் தேர்தல் முடிந்தவுடன் , இவ்வழக்கை திரும்ப்பெற கல்லூரி நிர்வாகம், நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். மேலும் இந்த போராட்டம் நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்டதால், மாணவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத என எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்ததை தொடர்ந்தும், வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூலம் அவர்கள் வழக்குகள் திரும்ப பெறப்படும் என உறுதியளித்தை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க