• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

June 21, 2022 தண்டோரா குழு

தமிழக அரசின் சார்பாக ஆண்டுதோறும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதலமைச்சரால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இயற்கை இன்னல்கள், விபத்துகள், தீ விபத்து, திருட்டு சம்பவங்கள், நீரில் மூழ்கும் நிகழ்வுகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது வீரத்துடன் துணிவு மற்றும் தைரியமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ஆற்றல்மிக்க தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்கள் இணையதளத்தின் மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க