• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்பனா சாவ்லாவாக பிரியங்கா சோப்ரா

April 24, 2017 தண்டோரா குழு

மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இத்திரைப்படத்தில் கல்பனா சாவ்லாவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கவுள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் கர்ணல் என்னும் இடத்தை சேர்ந்த கல்பனா சாவ்லா, 31 நாட்கள் விண்வெளியில் இருந்த பிறகு, பூமிக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவர் பயணம் செய்த ராக்கெட் வெடித்து 2௦௦3ம் ஆண்டு பலியானார்.

கல்பனாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. அவர் ‘கியிண்டிகோ’ என்னும் ஆங்கில தொடரிலும் ‘பேவாட்ச்’ என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருந்ததால், அவர் கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பார் என்பது உறுதியாகவில்லை.

தற்போது இந்திய திரும்பிய பிரியங்கா, இந்த திரைப்படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இதுபற்றி பிரியா மிஷ்ரா கூறும்போது, ‘கடந்த ஏழு வருடமாக இதன் கதையில் பணியாற்றி வருகிறேன். புது தயாரிப்பு நிறுவனம் ஒன்று படத்தைத் தயாரிக்க இருக்கிறது’ என்றார்.

மேலும்கடந்த வருடம் இவர் மேரிகோம் என்ற குத்துச்சண்டை வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றுக்கதையில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க