• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு முக.ஸ்டாலின் பாராட்டு

August 5, 2017 தண்டோரா குழு

அம்பேத்கர் சர்வதேச மாநாடு பெங்களூருவில் நடத்தப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு பாராட்டு தெரவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் சர்வதேச மாநாடு கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இதற்காக சித்தராமையாவுக்கு ஸ்டாலின் கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில்,இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாக்க அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்றுவது அவசியம் என்றும்அம்மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட முடிவுகளில் பல தமிழகத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படும் தருணத்தில் எல்லாம் திமுக அதனை எதிர்த்துப் போராடி உள்ளதாகவும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை மதித்துப் போற்றும் பெங்களூரு பிரகடனங்கள் பவளவிழா கொண்டாடும் முரசொலி இதழில் வெளியிடப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க