• Download mobile app
30 Oct 2025, ThursdayEdition - 3550
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகவில் அதிகாரியின் காலணிகளை எடுத்துச் செல்லும் கார் ஓட்டுனர்

July 19, 2017 தண்டோரா குழு

பெங்களூரில் கண்காணிப்பு பொறியாளரின் கார் ஒட்டுநர், அந்த அதிகாரியின் காலனியை வாகனத்தில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள கர்நாடக நீரவரி நிகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்தவர் பொறியாளர் கிருஷ்ணாஜி ராவ்.கர்நாடக மாநில அரசு குடிநீர் மற்றும் தண்ணீர் விநியோகத்தை மேம்படுத்த ‘கலசா நல்லா’ திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அந்த திட்டத்தை ஆய்வு செய்ய, அம்மாநிலத்தின் பெல்கம் மாவட்டத்திலுள்ள கானபூர் தாலுக்காவில் உள்ள கனகும்பி என்னும் இடத்திற்கு சென்றுள்ளார்.

அந்த இடத்தில் நல்ல மழைப்பெய்து உள்ளதால், சாலையில் நீர் ஓடியுள்ளது. இதை கவனித்த கிருஷ்ணாஜி ராவ்,தனது காலணியை வாகனத்தில் கழற்றிவிட்டு, ஆய்வு செய்ய வேண்டிய இடத்திற்கு வெறும் காலுடன் நடந்து சென்றுள்ளார்.

அப்போது தனது காலணியை காரிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி தனது கார் ஓட்டுனரிடம் அவர் கூறியுள்ளார்.அந்த ஓட்டுனர் அதை காரிலிருந்து எடுத்துக்கொண்டு வந்ததை அங்கிருந்த ஒருவர் புகைப்படம் எடுத்து, அதை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க