• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கும் செய்தி கேட்டு இரண்டு, மூன்று தினங்களாக தூக்கம் வரவில்லை – நாஞ்சில் சம்பத்

July 30, 2018 தண்டோரா குழு

கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கும் செய்தி கேட்டு இரண்டு, மூன்று தினங்களாக தூக்கம் வரவில்லை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், காவிரி மருத்துவமனைக்கு வந்த நாஞ்சில் சம்பத் கருணாநிதி உடல் நலம் குறித்து
செயல் தலைவர் முக .ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,

பெரியாரின் தலை மாணாக்கராய், அண்ணாவின் தம்பியாய் விளங்கும் கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கும் செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறேன். 1986-ல் கோவை சிதம்பரம் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றிய மாநாட்டில் பாரதிதாசன் உருவப்படத்தை திறந்து வைத்து என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இளம்பருவத்திலிருந்தே என்னை ஆட்கொண்ட தலைவர் அசைவற்று படுத்திருப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய நிழலில் வளர்ந்தவன் நான். இன்று அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இரண்டு, மூன்று தினங்களாக தூக்கம் வரவில்லை. விரல் நோக எழுதியவர், குரல் தேய பேசியவர், கால் தேய நடந்தவர் பிடறுகின்ற சிங்கம் போல் எழுந்து வர வேண்டும் என யாசிக்கிறேன்” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

மேலும் படிக்க