August 30, 2018
தண்டோரா குழு
கருணாநிதியின் தமிழக மது ஒழிப்பு கனவை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்என பீஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது. கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் காங்.மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சீதாராம் யெச்சூரி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, காஸ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் பேசிய பீஹார் முதல்வர் நிதீஷ் குமார்,
கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.50 ஆண்டுகள் ஒரு கட்சி தலைவராக இருந்தது அரிதான சாதனை.பீகாரில் கருணாநிதி மறைவிற்காக 2 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரித்தோம். கருணாநிதி மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. கருணாநிதி சமூக நீதியின் காவலர்பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து உழைத்தவர், விதவைகள் மறுமணம், ஜமீன்தாரி முறைகளில் முக்கிய பங்கற்றியவர்.1970களிலேயே ஊரக மின்மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியவர். பீகாரில் மது ஒழிப்பை கொண்டுவந்துள்ளோம், கருணாநிதியும் மது ஒழிப்புக்கு ஆதரவானவர். கருணாநிதியின் தமிழக மது ஒழிப்பு கனவை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்போது மது ஒழிப்பை திமுக அமல்படுத்தும் என விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.