September 14, 2018
தண்டோரா குழு
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம், வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம், வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தாராபுரம், காங்கேயம், பல்லடம், பொன்னிவாடியில் மக்களுடனான பயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அக்கட்சி அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.