• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கத்தார் துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் துறைமுகத்திற்கு செல்ல புதிய வழி

August 16, 2017 தண்டோரா குழு

கத்தார் துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் துறைமுகத்திற்கு செல்ல புதிய வழி ஒன்றை கத்தார் அரசு அறிமுகம் செய்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார், தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதாக மற்ற நாடுகள் குற்றம்சாட்டியது. கத்தார் நாடு, அந்த குற்றசாட்டுகளை மறுத்தது. இதையடுத்து, கத்தார் நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. கத்தார் நாட்டிற்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கு இடையே சாலை, கப்பல், விமானம் ஆகிய சேவைகள் முடக்கப்பட்டன. மேலும் பொருளாதாரமும் குறைந்தது.

இந்நிலையில், கத்தார் நாட்டின் துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் நாட்டின் துறைமுகத்திற்கு செல்ல புதிய வழியை கத்தார் அரசு அறிமுகம் செய்துள்ளது.

“கத்தார் நாட்டிலிருந்து கராச்சி செல்ல ஆறு நாட்கள் ஆகும். அதே போல் கராச்சியிலிருந்து கத்தார் வர எட்டு நாட்கள் ஆகும். இதன் மூலம் இரண்டு நாடுக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை விரைவாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“வாடிக்கையாளர்கள், இறக்குமதி, ஏற்றுமதி செய்பவர்கள், இந்த புதிய வழியின் மூலம் உலகின் பல முக்கிய துறைமுகங்களுக்கு செல்ல முடியும் என்று கத்தார் துறைமுக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க