• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது

February 14, 2022 தண்டோரா குழு

கோவையில் கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை போத்தனூர் கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி(34).கட்டிட தொழிலாளி.இவர் நேற்று இரவு அந்த பகுதியில் தனது நண்பர் சரவணன் என்பவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா (24) என்பவர் நடந்து சென்றார்.

போதையில் இருந்த டேவிட் ராஜா அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.அப்போது, எதற்காக ரோட்டில் சென்றவர்களிடம் தகராறு செய்கிறாய்? என்று கந்தசாமி கேட்டார்.இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் டேவிட் ராஜா ஆத்திரம் அடைந்து கந்தசாமியை கைகளால் தாக்கியது மட்டுமின்றி, உருட்டுக்கட்டையை எடுத்து தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.பின்னர் அங்கிருந்து டேவிட் ராஜா தப்பி ஓடி விட்டார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த கந்தசாமி வலி தாங்க முடியாமல் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கந்தசாமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்துவிட்டு டேவிட்ராஜா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் விரைந்து வந்து கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் டேவிட் ராஜாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க