• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்டபொம்மன் நகரில் சிறப்பு தூய்மைப்பணிகள் மேயர் ஆய்வு

April 7, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 29க்குட்பட்ட கட்டபொம்மன் நகரில் சிறப்பு தூய்மைப்பணிகள் நடந்தது.இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு செய்தார்.

கோவை கட்டபொம்மன் நகரின் சாலையோரங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றுதல்,தேங்கிய குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வடிகால் கால்வாயில் தேங்கியுள்ள செடி கொடிகள்,பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றிட சிறப்பு தூய்மை பணிகள் இன்று நடந்தது. இதனை மேயர் துவங்கி வைத்து ஆய்வு செய்தார்.

அப்போது சிறப்புத்தூய்மைப்பணியின் மூலம் சேகரமாகும் குப்பைகளை உடனடியாக வாகனம் மூலம் ஏற்றி அப்புறப்படுத்திட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் தேங்கியுள்ள மரக்கழிவுகளை உரமாக தயாரிக்கும் மரம் அரைக்கும் இயந்திரத்தின் மூலம் மக்கும் குப்பையாக மாற்றிட அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா,துணை மேயர் வெற்றிசெல்வன், வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல்,29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க