• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடை நடத்தி வியாபாரம் செய்திட அனுமதி வழங்க வேண்டும் – வியாபாரிகள் மனு

August 25, 2020 தண்டோரா குழு

கோவையில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் அண்ணா தினசரி மார்க்கெட்டை மறுபரிசீலனை செய்து தினசரி மார்க்கெட்டிற்கு கடை நடத்தி வியாபாரம் செய்திட அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை தினசரி மார்க்கெட் உள்ளிட்டவைகள் சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதால் தற்காலிகமாக கல்லூரி மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளில் காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்தன.தற்போது கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் அண்ணா தினசரி மார்க்கெட்டை மறு பரிசீலனை செய்து சாய்பாபா காலனி தினசரி மார்க்கெட்டினை சீரமைத்து சமூக இடைவெளியுடன் மீண்டும் கடை நடத்தி வியாபாரம் செய்யவும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.

மேலும் படிக்க