• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் நிவாரணமாக நடிகை கஸ்தூரி ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

November 23, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நடிகை கஸ்துரி அனுப்பினார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடும் சேதங்களை சந்தித்து. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி 3 தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தனியார், அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அனுப்பிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி,

புயல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள மக்களுக்காக உதவியளிக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில் 12 லட்சம் மதிப்புள்ள
நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்புவதாகவும் தெவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடி தண்ணீர் பிரச்சனை பூதாகரமாக உள்ளதால் தண்ணீரை சுத்தம் செய்யும் எந்திரங்கள், கொசுமருந்து உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைப்பதாகவும், முந்தைய பேரிடர்களில் மேற்கொள்ளப்பட்ட நடிவடிக்கைகளை காட்டிலும் தமிழக அரசு நன்றாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க