• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் நிவாரணமாக சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி

November 23, 2018 தண்டோரா குழு

சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி இன்று வழங்கப்பட்டது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடும் சேதங்களை சந்தித்து. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடைகள் மூலம் உதவிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி 3 தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தனியார், அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த உதவிகளை தமிழக அரசின் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவி வருகிறார்கள். இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் முதல்வரின் கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி இன்று வழங்கப்பட்டது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை. மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும் படிக்க