• Download mobile app
09 Aug 2026, SundayEdition - 3833
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு தள்ளுபடி!

April 27, 2018 தண்டோரா குழு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாதுஉயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள்‌‌‌, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்த வர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதையடுத்து, இவ்வழக்கில் இன்று வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால்,தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு இன்று தீர்பளித்துள்ளது.

அதில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால்
முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்திரவிடமுடியாது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டனர்.

மேலும் படிக்க