July 21, 2017
தண்டோரா குழு
பன்னீர்செல்வம் அணி தம்மை புறக்கணிப்பதாக ஆறுகுட்டி எம்எல்ஏ குற்றச்சாட்டியுள்ளார்.
அதிமுக இரண்டு அணிக்களாக பிரிந்த போது ஓபிஎஸ் அணிக்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தவர் கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுகுட்டி.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இரு அணிகளாக இருந்தாலும், என் தொகுதிக்கு பல திட்டங்களை செயல்படுத்தி தரும் முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் பன்னீர்செல்வம் அணி தம்மை புறக்கணிப்பதாகவும் என்னை புறக்கணிப்பவர்களை, நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.எனினும் அணி மாறுவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆறுகுட்டி விரைவில் எடப்பாடி அணிக்கு ஆதரவு அளிப்பார் அதிமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.