• Download mobile app
16 Feb 2026, MondayEdition - 3659
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு 29ம் தேதி கோவைக்கு உள்ளூர் விடுமுறை

August 9, 2023 தண்டோரா குழு

ஓணம்‌ பண்டிகையை முன்னிட்டு வரும்‌ 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில்‌ உள்ள மாநில அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர்‌ விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக அவ்வலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு வரும்‌ செப்டம்பர் 2ம் தேதி அன்று முழு பணிநாளாக செயல்படும்‌.

இந்த உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கும்‌ போது மாவட்டத்தில்‌ உள்ள கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலகங்கள்‌ அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும்‌ பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌.

இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க