• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓட்டு போட்டால் பார்க்கிங் கட்டணம் இலவசம் கோவையில் உள்ள மால்கள் அறிவிப்பு !

April 17, 2019 தண்டோரா குழு

கோவையில் நாளை 17 வது மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மால் மூடப்படும் என்றும், வாக்களித்ததற்கான அடையாளமான விறல் மையை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மால்கள் அறிவித்துள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள prozone மால் இயங்கி வருகிறது. நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மாலை 6 மணி வரை மால் முழுவதும் மூடப்படும் என்று மால் நிர்வாகம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாலை மாலுக்கு வரும் பொதுமக்கள் வாக்களித்ததற்கான அடையாளமான விறல் மையை காண்பித்தால் நாளை (18 -04 -19 ) மாலை 6 மணி முதல் அடுத்த நாள் (19 -04 -19 ) வரை பார்க்கிங் கட்டணத்தை செலுத்தாமல் இலவசமாக பார்க்கிங் நிறுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அதைபோல் கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள புரூக் பீல்டு மாலிலும் இதேபோல் மாலை மாலுக்கு வரும் பொதுமக்கள் வாக்களித்ததற்கான அடையாளமான விறல் மையை காண்பித்தால் நாளை (18 -04 -19 ) மாலை 6 மணி முதல் அடுத்த நாள் (19 -04 -19 ) வரை பார்க்கிங் கட்டணத்தை செலுத்தாமல் இலவசமாக பார்க்கிங் நிறுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தி வந்த நிலையில், அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் கோவையில் உள்ள மால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க