• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடிசாவில் வாய்க்காலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

December 16, 2017 தண்டோரா குழு

ஓடிசாவில் பிரசவ வேதனை அடைந்த பெண்ணிற்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்தால்,வாய்க்காலில் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில், தல்ஜனிகுடா கிராமத்தை சேர்ந்தவர் நிறைமாத கர்ப்பிணியான தானேய் முதுலி. இவருடைய கணவர் அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு அருகிலிருந்த கோராபுட் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்தார்.
இந்நிலையில், கணவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற தானேய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மருத்துவமனையில் இருந்த வெளி நோயாளிகள் பிரிவுக்கு சென்று, அங்கிருந்த மருத்துவரின் உதவியை நாடியுள்ளார். அவருடைய மருத்துவ ஆவணங்களை அந்த மருத்துவர் கேட்டுள்ளார். கணவனை பார்க்க மருத்துவமனைக்கு செல்வதால், அவருடைய மருத்துவ ஆவணங்களை எடுத்து செல்லவில்லை. அவரிடம் ஆவணங்கள் இல்லாதாதால், அவருக்கு சிகிச்சை அளிக்க, அந்த மருத்துவர் மறுத்துவிட்டார்.

வேறு வழிதெரியாமல், உதவியற்ற தானோய், அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு தேநீர் கடைக்குப் பின் உள்ள, ஒரு தனிமையான இடத்திற்கு சென்று அங்கிருந்த வாய்க்காலில், பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தேநீர் கடைக்கு வந்தவர்கள், அவளை பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே அவளையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானேய் மற்றும் அவளது குழந்தைக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்தனர். தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவத் தொடர்ந்து, கோராபுட் குடிமக்கள் மன்றம் இந்த சம்பவத்திற்கு உயர்மட்ட விசாரணையை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க