• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் தொடர்ந்து காவலர்கள் இடம்பெறவேண்டும் – சைலேந்திரபாபு

December 17, 2021 தண்டோரா குழு

கோவையில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் வென்ற வெற்றியாளர்களுக்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

கோவை நேரு விளையாட்டரங்கில் 61வது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது.
இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போட்டியில் நான்கு மண்டலங்களை சேர்ந்த காவலர்கள், ஆயுதப்படை மற்றும் கமாண்டோ படையினர் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் 100 மீ,200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்,உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டெறிதல் என 22 போட்டிகள் நடைபெற்றது.இந்த நிலையில் இன்று சென்னை மாநகர காவல்துறையினர் 333 புள்ளிகள் வென்று ஒட்டு மொத்த சேம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.இரண்டாவதாக ஆயுதப்படை போலீசார் 221 புள்ளிகள் பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்

விளையாட்டுக்கும் காவல்துறைக்கும் நல்ல தொடர்பு உண்டு தொடர்ந்து இந்த பாரம்பரியம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் தொடர்ந்து காவலர்கள் இடம்பெறவேண்டும் என்ற நோக்கில் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க