• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரே குழுவாக தேசிய கல்வி சுற்றுலா சென்று திரும்பிய 141 பள்ளி மாணவ,மாணவிகள்

November 9, 2022 தண்டோரா குழு

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளியில் பயிலும் 141 மாணவ,மாணவிகள் ஒரே குழுவாக உ.பி. ராஜஸ்தான்,டில்லி என தேசிய கல்வி சுற்றுலா சென்று திரும்பியுள்ளது தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாணவ,மாணவிகள் பள்ளிகளில் கல்வி பயிலும் போதே அவர்களின் தனி திறன்களை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கோவை கவுண்டர் மில் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியான வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய வரலாற்று சின்னங்களை நேரில் கண்டு பயிலும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பாக மெகா தேசிய சுற்றுலா பயணம் அழைத்து சென்று அசத்தியுள்ளனர்.

அதன் படி பத்து, பதினொன்று, பனிரெண்டாம் பயிலும் 79 மாணவர்கள் 62 மாணவிகள் என 141 மாணவ,மாணவிகளையும் ஒரே குழுவாக இணைத்து தேசிய சுற்றுலா சென்று வந்துள்ளனர்.எட்டு நாட்கள் பயணமாக சென்று திரும்பிய மாணவ,,மாணவிகள் தங்களது பயணம் குறித்த அனுபவங்களை கூறுகையில்,வரலாற்று புத்தகங்களில் வரும் பொற்கோவில், தாஜ்மகால்,குதூப் மினார் போன்ற பல்வேறு இடங்களை நேரில் பார்த்ததை பிரமிப்பாக இருந்ததாக கூறினார்.

மாணவ,மாணவிகளை அழைத்து சென்ற பள்ளி நிர்வாக குழுவினர் கூறுகையில்,

தனியார் பள்ளி சுற்றுலாவாக குறைந்த செலவில் எட்டு நாட்கள் சுற்றுலா பயணமாக பாதுகாப்பாக அழைத்து சென்று திரும்பியதில் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர். ஒரே குழுவாக 141 மாணவ,மாணவிகள் தேசிய சுற்றுலாவாக திரும்பியுள்ள இந்த பயணம் தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க