July 19, 2017
தண்டோரா குழு
திரையங்குகளில் படம் வெளியான முதல் நாளே இணையதளத்தில் அப்படம் வெளியாவதால் படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.இதனைத் தடுக்க பல்வேறு வகையிலும் தயாரிப்பளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் திருட்டு விசிடியை ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. படம் இணையதளத்தில் வெளியாவதில் முக்கிய பங்கு வகிப்பது தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தான். இதனால், தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்ட வேண்டும் என சினிமா துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இன்னும் ஒரு வாரத்தில் தமிழ் ராக்கர்ஸ்க்கு முடிவு கட்டுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்.