• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒன்றாக பட்டம் வாங்கிய தந்தையும், மகனும் !

May 26, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் தந்தையும் மகனும் ஒன்றாக டிப்ளமோ பட்டம் பெற்றுள்ள சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் டுவின்சொன் ஜீன்டி(63) என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் நியூஜெர்சி போக்குவரத்து பஸ் ஓட்டுநராக பணியாற்றி, கடந்த 2௦13-ம் ஆண்டு, ஓய்வுபெற்றார். பணி ஓய்வுக்கு பிறகு, அவர் வில்லியம் பாட்டர்சன் பல்கலைக்கழகத்தில் முழு நேர மாணவராக சேர்ந்தார்.

அதேபோல், டுவின்சொன்னுடைய மகன் பெஞ்சமின் கடந்த 2008-ம் ஆண்டு, ரட்ஜெர்ஸ் பலகலைக்கழகத்தில் உளவியல் பாடத்தில் சேர்ந்தார். ஆனால், படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பாஸ்ட்புட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்று அவருடைய தந்தை காட்டிய ஆர்வம், பெஞ்சமினிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. அதனால் மீண்டும் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த பெஞ்சமின், தான் சேர்ந்த ரட்ஜெர்ஸ் பலகலைக்கழகத்துக்கு திரும்பாமல், அவருடைய தந்தை படித்து வந்த வில்லியம் பாட்டர்சன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உளவியல் பாடத்தை படித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் தந்தையும் மகனும் ஒன்றாக பட்டம் பெற்றனர்.

“என் தந்தை தான் என்னுடைய மிக பெரிய உத்வேகம். பணியிலிருந்தோ அல்லது வகுப்பிலிருந்தோ நான் தாமதமாக வீட்டிற்கு வரும்போது, அவர் படித்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன்.

அவருடைய கடின உழைப்பு என்னை உற்சாகப்படுத்தும். படமளிப்பு விழாவின்போது, அவர் மேடைக்கு சென்று பட்டத்தை பெற்றபோது, விவரிக்க முடியாத மகிழ்ச்சி அடைந்தேன்” என்று பெஞ்சமின் கூறினார்.

மேலும் படிக்க