• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடி கோலம் வரையும் திருவிழா

January 29, 2020

கோவையில் என் வழி தமிழ்வழி எனும் தலைப்பில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடி கோலம் வரையும் திருவிழா நடைபெற்றது.

டாடா டீ சக்ரா கோல்ட் சார்பாக தமிழ் பெண்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கோலம் வரையும் கலையை உலகிற்கு உணர்த்தும் வகையில் மாபெரும் கோலம் வரையும் நிகழ்ச்சி கோவை அவினாசிலிங்கம் பெண்கள் நிகர்நிலை பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் கூடி கோலம் வரைந்தனர்.என் வழி தமிழ் வழி எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆக பதிவு செய்யும் வகையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து டாடா டீ சக்ரா கோல்டின் பிராண்ட் மேலாளர் மதுக்கூர் பேசுகையில், கோலம் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து பெண்களின் தினசரி நடவடிக்கையாகவும் சமய சடங்கை கொண்ட முக்கிய கலையாக உள்ளது தமிழ் கலாச்சாரத்தில் வீடுகளின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தின் இணைப்பு புள்ளியாக திகழும் இடங்களில் கோலம் வரைவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால் தமிழகத்தில் நமது பிராண்டின் விழிப்புணர்வை உருவாக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க