• Download mobile app
08 Aug 2026, SaturdayEdition - 3832
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல்

March 1, 2018 தண்டோரா குழு

கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார் நேற்று கைது செய்தனர்.

பின்னர் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உடல் நலத்தை காரணம் காட்டி மருத்துவமனையிலேயே ஒரு நாள் முழுவதையும் கார்த்திக் சிதம்பரம் கழித்தார். இதனால்  சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம்  காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில், 5 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

மேலும் படிக்க