• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் -கமல்ஹாசன்

September 25, 2020 தண்டோரா குழு

பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 5 முதல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எஸ்.பி.பி கடந்த வாரம் ஓரளவு உடல்நிலை முன்னேற்றம் பெற்ற நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி. மரணமடைந்தார்.

அவரது மரணத்திற்கு திரையுலகினர் மற்றும் பல்வேறு பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வீடியோவில் பேசியுள்ளார்.

இரங்கல் வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது:

“வெகுசில பெருங்கலைஞர்களுக்கே தாம் வாழும் காலத்திலேயே, திறமைக்குத் தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்பிபி.நாடு தழுவிய புகழ் மழையில் நனைந்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனாக என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.அவர் நனைந்த மழையில் கொஞ்சம் நானும் நனைய அனுமதித்த அண்ணனுக்கு நன்றி.அவர் குழலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நாலு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க