• Download mobile app
02 Nov 2025, SundayEdition - 3553
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏலம் விடப்படும் இங்கிலாந்து இளவரசி டயானா எழுதிய கடிதங்கள்

August 7, 2017 தண்டோரா குழு

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா எழுதிய முக்கியமான கடிதங்கள் சிலவற்றை ஏலம் விட ஏற்பாடு நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி டயானாவின் இறப்பும் அவருடைய வாழ்க்கை குறித்த சர்ச்சைகளும் இன்னும் முடிவடையவில்லை. கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் இங்கிலாந்து இளவரசி டயானா உயிரிழந்தார்.

அவர் இறப்பதற்கு முன்பாக தனது தோழி கரோலின் ப்ரைட்க்கு கடிதம் எழுதியுள்ளார். 1980-ம் ஆண்டு ஜனவரி முதல் 1982 ஜனவரி வரை எழுதப்பட்ட கடிதங்களை இங்கிலாந்தின் ஆர்.ஆர். நிறுவனம் ஆவணப்படுத்தியது. தற்போது அந்த கடிதங்கள் 125,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டயானாவின் திருமண வாழ்க்கை, கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே உறவு இருப்பதாக அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் ஆகியவற்றை குறித்து அவர் தனது தோழிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடைய சுயமரியாதையை காப்பாற்ற முடியாத நிலை, மன அழுத்தம், மற்றும் ஊடகங்களின் தலையீடு குறித்தும் அந்த கடிதத்தில் குறிப்பீட்டுள்ளார்.

மேலும் படிக்க